டுரியான் துங்கல் போலீஸ் அதிகாரிகளுக்கு கோவிட் 19 தொற்று உறுதி; போலீஸ் நிலையம் ஜூலை 22வரை மூடப்பட்டது

அலோர் காஜா, ஜூலை 19:

டுரியான் துங்கல் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே கோவிட் -19!தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அலோர் காஜா போலீஸ் பிரிவின் கீழுள்ள இக்காவல் நிலையம் ஜூலை 22 வரை மூடப்படும்.

டுரியான் துங்கல் காவல் நிலையம் இன்று (ஜூலை 19) பிற்பகல் 2 மணி முதல் வியாழக்கிழமை (ஜூலை 22) வரை மூடப்படும் என்று அலோர் காஜா OCPD அர்ஷாத் அபு தெரிவித்தார்.

றும்பை, கடெக் மற்றும் மாசாப் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் தற்காலிகமாக டுரியான் துங்கல் நிலையத்தின் செயல்பாடுகளை நிறைவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

“டுரியான் துங்கல் காவல் நிலையத்தைச் சுற்றியுள்ள குற்றத் தடுப்பு ரோந்துகள் அலோர் கஜா காவல் தலைமையகத்தால் வலுப்படுத்தப்படும்” என்றும் திங்களன்று (ஜூலை 19) OCPD அர்ஷாத் தெரிவித்தார்.

மேலும் கோவிட் -19 காரணமாக கடந்த சனிக்கிழமை (ஜூலை 17) கோலா சுங்கை பாரு காவல் நிலையமும் ஜூலை 26 வரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here