ரொரன்டோவிலுள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் 81 பேர் கொரோனா தொற்றுக்கு பலி!

ரொரன்டோ, ஜூலை 20:

கனடாவில் கோவிட் -19 தொற்று பரவல் உச்சத்தில் இருந்த நாட்களில் சுகாதாரத்துறையினர் முதியோர் காப்பகங்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கியிருந்த வேளையிலும் 81 பேர் கொரோனாவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கனடா சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதியோர் இல்லங்களில் உயிர் காக்கும் அறைகள் உருவாக்கப்பட வேண்டும், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் போன்ற ஆலோசனைகளை குறித்த முதியோர் காப்பகம் உதாசீனம் செய்ததாலேயே இறப்புக்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2020 டிசம்பர் 4 முதல் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், டிசம்பர் 11 ரொரன்டோவின் Tendercare முதியோர் காப்பகத்திற்கு மின் அஞ்சல் மூலம் இவ் அறிவுறுத்தல்களை அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்தக் கட்டிடத்தின் நான்காவது மாடியை கொரோனா தனிமைப்படுத்தல் தளமாக பயன்படுத்த முன்வைத்த ஆலோசனையும் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் தங்களிடம் போதிய ஊழியர்கள் இல்லை என மட்டும் தெரிவித்துள்ளது Tendercare முதியோர் காப்பகம்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பின்பற்றியிருந்தால் Tendercare காப்பகத்தில் பேரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here