பூமியை நோக்கி வரும் குறுங்கோள்..

ஒருவேளை மோதிட்டா !.. திசை திருப்ப சீனா யோசனை- சரியா வருமா!

குறுங்கோள் ஒன்று பூமிக்கு அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதிசயங்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்களும், நட்சத்திரங்களும் அடங்கியுள்ளன. இந்நிலையில் ‘2008 GO20’ என்று பெயரிடப்பட்டுள்ள குறுங்கோள் ஒன்று வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி பூமியை நோக்கி 18 ஆயிரம் மைல் வேகத்தில் வரவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த குறுங்கோள் பூமியை நோக்கி வருவதால் நாம் பயப்படத் தேவையில்லை என்றும் ,குறுங்கோள் வரும்போது இதனுடைய வேகம்தான் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 606 மைல்கல் இருக்கும் நிலையில் இந்த குறுங்கோளுக்கும் பூமிக்கும் இடையே 37 லட்சத்து 18 ஆயிரத்து 732 மைல்கல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

மேலும் இந்த குறுங்கோள் பூமியை மோதும் அளவுக்கு நெருங்கும்போது இதனை திசைதிருப்ப பெரிய வகை ராக்கெட்டுகளை விடலாம் என்ற சீன ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here