பெகாசிஸ் ஸ்பைவேர் குறித்து விசாரணை

 இஸ்ரேல் அரசு குழு அமைத்தது

பெகாசிஸ் ஸ்பைவேர் வழியாக உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கண்காணிக்கப்பட்டது தொடர்பாக எழுந்துள்ள புகாரை அடுத்து இதுகுறித்து விசாரிக்க மூத்த அமைச்சர்கள் குழுவொன்றை இஸ்ரேல் அரசு நியமித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலிய நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது நேரடியாக அந்நாட்டு பிரதமர் நப்தலி பென்னட்க்கு பதிலளிக்கக் கூடிய நேரடி அமைப்பாகும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் பெகசிஸ் கண்காணித்தது தொடர்பாக புகார்கள் எழுந்ததை அடுத்து அதுகுறித்து பதிலளித்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், “இந்த சம்பவம் பாதுகாப்பு அமைச்சகத்தின் பார்வைக்கு அப்பாற்பட்டது” என்று கூறியிருந்தததாகவும் என்டிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணை குறித்து தெரிவித்துள்ள அக்குழு, “எங்களது நோக்கம் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதுதான்” என்று குறிபிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

என்.எஸ்.ஒ நிறுவனம் இதுகுறித்து பதிலளிக்கவில்லை என்றும் என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here