முன்னாள் பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

சுங்கைப் பட்டாணி: பெர்தாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜபரியா அப்துல் வஹாப் தனது 73 வயதில் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) காலை 9.30 மணியளவில் மருத்துவமனை சுல்தான் அப்துல் ஹலீமில் இறந்தார்.

கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  டத்தோ ஶ்ரீ  ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன் இந்த விஷயத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது மனம் உடைந்ததாக கூறினார். அவர் எனக்கு ஒரு தாயைப் போலவே இருந்தார். இறைவன் அவரை உண்மையுள்ளவர்களிடையே வைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மாநில வனிதா அம்னோ தலைவரான ஜபரியா, ஜூலை 11 முதல் நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 23) காலை 11.30 மணிக்கு சுங்கைப் பட்டாணியில் உள்ள தாமான் கெலிசா முஸ்லிம் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்படுவார்.

12 ஆவது பொதுத் தேர்தலில், பி.கே.ஆரின் நூர்சியா அர்ஷத்தை 2,652 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஜபரியா என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here