தாண்டுவதற்குத்தானே தடைகள்- தகர்க்கும் இந்த படைகள்

தடைகளை உடைத்த தமிழ்நாட்டுப் பெண்கள்

டோக்கியோ ஒலிம்பிக்

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 இல் தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

205 நாடுகளில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர்.இந்தியாவிலிருந்து 120 வீரர், வீராங்கனைகள் 18விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் இருந்து 27 விளையாட்டு வீரர்கள் குத்துச் சண்டை மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இதில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து, வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி, டென்னிஸ் போட்டியில் சானியா மிர்ஷா, குத்துச் சண்டைப் போட்டியில் மேரிகோம், மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு, ஜிம்னாஸ்டிக் போட்டியில் பிரணதி நாயக், சீமா பிஸ்லா, சோனம் மாலிக் மற்றும் மகளிர் ஹாக்கி குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து வாள்வீச்சு போட்டிக்கு பவானிதேவி, பாய்மர படகுப் போட்டிக்கு நேத்ரா குமணன், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு குஜராத் மாநிலம் சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்க இருக்கின்றனர்.குறிப்பாக தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் பின்தங்கிய கிராமப்புறங்களில் இருந்தும் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.

இதில் திருச்சி மாவட்டம் குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், திருவெறும்பூரைச் சேர்ந்த சுபா வெங்கடேஷன், மதுரை சக்திமங்கலத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி ஆகிய மூன்று பெண்களும் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டை நடத்தப் போகிறார்கள். இவர்கள் மூவருமே மிகவும் பின்தங்கிய சூழலில் பொருளாதார நெருக்கடியில் வளர்ந்தவர்கள் என்பது
இங்கே குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here