பினாங்கு ஆளுநர் பிறந்த நாளில் 1,036 பேருக்கு விருதுகள்; மக்கள் ஓசை இயக்குநர்களில் ஒருவரான கோபாலகிருஷ்ணனுக்கு டத்தோ விருது

பினாங்கு ஆளுநர் பிறந்த நாளை முன்னிட்டு 1,036 பேருக்கு மாநிலத்தின் உயரிய விருதுகளையும் பதக்கங்களையும் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த உயரிய விருதுகளை பெறுபவர்களில் பல இந்தியர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் மக்கள் ஓசை நாளிதழின் இயக்குநர்களில் ஒருவரான கோபால கிருஷ்ணன் சண்முகமணி அவர்களுக்கு டர்ஜா செத்தியா பங்குவான் நெகிரி (டிஎஸ்பிஎன்) எனும் உயரிய டத்தோ விருதினை பெறுகிறார்.

30 ஆண்டு கால பத்திரிகை அனுபவம் கொண்ட கோபாலகிருஷ்ணன் தமிழவேள் ஆதிகுமணன், ஆதி.ராஜகுமாரன்  ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்பொழுது மக்கள் ஓசையின் வளர்ச்சிக்கு அவரின் சேவை அளப்பரியது. மேலும் கோபால கிருஷ்ணன் அவர்கள் நயனம் வார இதழின் மேலாளராக இருந்துள்ளார்.

டர்ஜா கெமிலாங்  பங்குவான் நெகிரி (டிஜிபிஎன்) எனும் டத்தோ ஶ்ரீ விருது 15 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில் தொழிலபதிரும் நன்கொடையாளருமான டத்தோ புலவேந்திரன் காயாம்பு ஒருவராவார்.

மேலும் பல இந்தியர்கள் மாநிலத்தின் பல உயரிய விருதுகளை பெறுகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here