பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் ஏற்பாட்டில் மனிதாபிமான உதவி

கோவிட்-19 தொற்று உலகையே புரட்டி போட்டிருக்கிறது. இந்த தொற்றின் காரணமாக பலர் வேலைகளை இழந்து வாழ்வாதரத்திற்கு வழி தேடுகின்றனர். மேலும் அனைவருக்கும் அடிப்படை தேவையாக இருப்பது உணவு. அதை நம்மில் பலர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் டான்ஶ்ரீ அம்பிகை பாலன் தலைமையில் வசதி குறைந்தவர்களுக்கு  பல உதவிகள் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவிட்  தொற்று ஆரம்பித்த காலம் தொட்டு இது மூன்றாவது முறையாக வழங்கப்படும் உதவியாகும் என்று டான்ஶ்ரீ அம்பிகை பாலன் தெரிவித்தார். நாங்கள் விவேகானந்தா இடைநிலைப்பள்ளி, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மற்றும் செந்தூல் தம்புசாமி தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளியை சேர்ந்த மாணவர்களின்  குடும்பங்களுக்கு  உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம்.

பள்ளியின் பயிலும் மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இது வரை 400 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி மதிப்பிலான அத்திவாசிய உணவுப் பொருட்களை வழங்கி இருக்கிறோம் என்று பள்ளியின் முதல்வர் தங்க பெருமாள் தெரிவித்தார்.

இறைவனின் அருளால் இந்த கோவிட் தொற்று விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம். அதே வேளை விவேகானந்தா ஆசிரமத்தின் வழி எங்களின் உதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here