பள்ளி மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 28:

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து ஆசிரியர்களும் கோவிட் -19 தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டும் என்று தடுப்பூசி ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜூலை 27 ஆம் தேதி வரையுள்ள நிலவரப்படி, 73% ஆசிரியர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் சிற்றுண்டி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 67% துணை ஊழியர்களும் தங்களது தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்களில் 38% பேர் தடுப்பூசியிம் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

படிவம் ஐந்து மாணவர்களுக்கு கற்பிப்பவர்களைப் பொறுத்தவரை, 90% ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களில் 66% தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கைரி கூறினார்.

கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CITF) தடுப்பூசி செலுத்துவதை நிராகரித்த ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு ஆசிரியர்கள் அனவருக்கும் தடுப்பூசி போட்டுவிட முடியும என்று நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவெ அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here