ஒல்லியாக மாறினால் பரிசு வழங்கப்படும்.

உடல் எடையைக் குறைக்க இப்படியும்  செய்யலாம் !

பிரிட்டன் நாட்டு மக்கள் தங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமான முறையில் கடைப்பிடித்து உடல் எடையை குறைத்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக பிரிட்டன் அரசு  ஆப் ஒன்றைத் தயாரித்துள்ளது. அந்த ஆப் ஆனது சூப்பர் மார்க்கெட் சாஃப்ட்வேர் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் யார் அதிகமாக ஆரோக்கியமற்ற பொருட்களை வாங்காமல் காய்கறிகள், பழங்களை வாங்குகிறார்களோ அவர்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளையே வாங்குபவர்களுக்கு லால்டி பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி அவர்கள் டிஸ்கவுண்ட், இலவச டிக்கெட் ஆகிவற்றை பெற்றுக்கொள்ளலாம். 

இந்தத் திட்டம் வரும் 2022 ஜனவரி மாதம் அறிமுகமாகிறது. இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த திட்டத்தை நாட்டு அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here