சிறப்பு நாடாளுமன்ற அமர்வு அதிக நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்; அன்வார் இப்ராஹிம் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29:

   சிறப்பு நாடாளுமன்ற அமர்வு ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்பட வேண்டும், இதனால் கோவிட் -19 தொற்றுநோய் குறித்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் விவாதிக்கலாம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தற்போதைய சுகாதார நெருக்கடியால் சட்டமியற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன என்பதை தாம் புரிந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவரான அவர் கூறினார்.

“கட்டுப்பாடுகளை நான் புரிந்துகொள்கிறேன், கோவிட் -19 காரணமாக பரிசீலனைகள் கட்டுப்பாடுகள் என சபாநாயகருக்கும் பல பொறுப்புகள் உள்ளன என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்”

“ஆனாலும் அமைச்சர்களுடன் பேசி சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வுகளின் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் கல்வி போன்ற பல பிரச்சினைகள் விரிவாக இன்னும் விவாதிக்கப்படவில்லை” என்று அவர் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

“வேண்டுமானல் நாடாளுமன்ற அமர்வுகளின் நேரத்தை மூன்று அல்லது நான்கு மணிநேரங்களுக்கு கட்டுப்படுத்தலாம், அவ்வாறு செய்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம்” என்றும் கூறினார்.

“ஆனால் நான் இதனை பரிசீலிக்குமாறு கோருகிறேன், இவ்வாறு அதிக நாட்கள் நாடாளுமன்றம் கூடினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெளிவாக கூற முடியும் ” என்று வியாழக்கிழமை (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அசார் அஜீசன் ஹருன் இதற்கு பதில் கூறுகையில், நேரம் நீட்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமைச்சரின் பொறுப்பாகும் என்றார்.

“நேரத்தை நீட்டிப்பது எனது அதிகாரத்திற்குட்பட்டதில்லை. நாடாளுமன்றத்தின் நிலையான ஆணை 12 (3) இல் சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வு நேரத்தை மாலை 5.30 மணிக்குப் பிறகு அல்லது 15 நிமிடங்களுக்கு மேற்படாமல் சபையால் தீர்மானிக்கப்படக்கூடிய நேரத்திற்குப் பிறகு நீட்டிக்க முடியும் என்று அது குறிப்பிடுகிறது.

“இருப்பினும், நிலையான ஆணை 12 (1) இல் ஒரு விதி உள்ளது, எந்தவொரு நேரத்திலும் அமைச்சர் அறிவிப்பு இல்லாமல் திருத்தம் அல்லது விவாதம் இல்லாமல் முடிவு செய்யப்பட வேண்டும். “எனவே அவ்வாறு அனைத்து அமைச்சர்களும் ஒத்துபோவது அமைச்சர்களை பொறுத்தது, அவ்வாறு செய்வது பொருத்தமானது என்று அன்வர் கருதுகிறார் போலும் என்று அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here