கிணறு தோண்டும்போது பூதம் வரவில்லை

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தோன்றியது!

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு, இலங்கையில் ஒரு வீட்டில் கிணறு தோண்டும்போது கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையின் ரத்தினபுரி பகுதியில் ரத்தினங்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி ரத்தின தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் கமாகே என்ற ரத்தின வியாபாரியின் வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது தற்செயலாக மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு கிடைத்து. இது 510 கிலோ அல்லது 25 லட்சம் காரட் எடை கொண்டதாக உள்ளது.

வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பில் 745 கோடி இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மூன்றாம் தலைமுறை ரத்தின வியாபாரியான கமாகே கூறும்போது, ‘கிணறு தோண்டும்போது அரிதான கல் கிடைத்துள்ளதாக தொழிலாளர்கள் கூறினர். பிறகு அதைக்கண்டு நாங்கள் வியந்து போனோம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here