ராஜ்குந்த்ரா கைது : போலீசார் தகவல்
அவரது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஜாமீன் வழங்ககோரி அவர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜ்குந்த்ரா சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை கைது செய்ய முறையாக சம்மனோ, கைது வாரண்டோ அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், “ராஜ்குந்த்ராவை கைது செய்வதற்கு முன்பு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும் ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்க அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.