தவிர்க்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகள் பயணத் தடை:

 அச்சுறுத்தும் சவுதி அரேபியா

கொரோனா வைரஸ் மற்றும் அதன் புதிய மாறுபாடுகளின் பரவலைத் தடுக்க, அரசாங்கத்தின் `சிவப்பு பட்டியலில்’ இருக்கும் நாடுகளுக்கு பயணிக்கும் மக்கள் மீது மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா கூறியுள்ளது.

பெயரிடப்படாத உள்துறை அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி மாநில செய்தி நிறுவனம் எஸ்.பி.ஏ, மார்ச் மாதம் 2020 முதல் முதல் முறையாக அதிகாரிகளின் முன் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட சில சவுதி குடிமக்கள் பயண விதிமுறைகளை மீறியதாகக் கூறினார்.

“இதில் சம்பந்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டவர்கள் திரும்பியவுடன் சட்டப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிகக் வெண்டும். அவர்கள் கடுமையான அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவதோடு மூன்று வருடங்களுக்கு அவர்களது பயணத்திற்கு தடை விதிக்கப்படும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆப்கானிஸ்தான்  அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, லெபனான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, துருக்கி, வியட்நாம்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.

“குடிமக்கள் நேரடியாகவோ அல்லது வேறொரு நாடு வழியாகவோ இந்த பட்டியலில் உள்ள நாடுகளுக்கோ அல்லது தொற்றை கட்டுப்படுத்தாத அல்லது புதிய மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ள பிற நடுகளுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

சுமார் 30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய வளைகுடா நாடான சவுதி அரேபியாவில்  செவ்வாயன்று 1,379 பேர் புதிதாக கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனுடன் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 520,774 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 8,189 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here