மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்

60 வயதைக்  கடந்தவரா  நீங்கள்..? ..

உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட், ஐந்து மாதத்திற்கு முன்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜனாதிபதி, Isaac Herzog-க்கு வரும் செப்டம்பர் மாதம் 61 வயதாகிறது.

எனவே, அவர் இன்று முதல் நபராக மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாறுபாடு பரவுவதால் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. அதன்படி உலகிலேயே முதல் நாடாக 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த முன்வந்திருக்கிறது.

மேலும், இஸ்ரேல் நாட்டின் பிரதமர், முன்பே சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here