டெல்டா வைரஸ் 1000 மடங்கு ஆபத்தானது, ஆபத்தானது!
சாதாரண குர்ஆனோ வைரஸ்களை விட டெல்டா வைரஸ் ஆயிரம் மடங்கு ஆபத்தானது என அமெரிக்க சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை உலகம் முழுவதும் நீடித்து வரும் நிலையில் தற்போது புதிதாக டெல்டா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக அந்தந்த நாட்டு அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளும் டெல்டா வைரசுக்கு எதிராகவும் வேலை செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டெல்டா வகை கொடோன்ச்ச் வைரஸ் சின்னம்மை நோயைப் போலவே எளிதாக பரவக்கூடியது என்றும் கொரோனா வைரசை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது என்றும் அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தடுப்பூசிகள் 90 சதவீத பாதுகாப்பு அளித்தாலும் டெல்டா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் அவை பெரிய அளவு செயல்படுவதில்லை என்றும் அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே வைரஸ் நாட்டை விட்டுப் போய்விட்டது என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க சுகாதார ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.