பெட்டாலிங் ஜெயா:
பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹாசன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
தக்கியுடினுக்கு இதயப்பிரச்சினை காரணமாக மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
“தக்கியுடின் மூன்று மணி நேரம் ஆஞ்சியோகிராம் (angiogram) செய்தார், ஏனெனில் அவரது இதயத்தில் மூன்று பகுதிகள் அடைபட்டிருந்தன.
“எனினும், அறுவை சிகிச்சையின் பின் அவரது நிலைமை சீராக உள்ளது என்றும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் உத்துசான் மலேசியா திங்களன்று (ஆகஸ்ட் 2) செய்தி வெளியிட்டது.
அவர் IHEAL மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
BAS துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மேன் தனது முகநூலில் தக்கியுடின் அறுவை சிகிச்சையை உறுதிப்படுத்தினார். மேலும் தக்கியுடின் பாதுகாப்பாக உடல்நல மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டார் என்று ஒரு மருத்துவர் சொன்னதாகவும் கூறினார்.
“இறைவனின் ஆசியால் எல்லாம் நன்றாக நடந்தது என்றும் அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம், “என்றும் அவர் கூறினார்.