வெள்ளை சாண்ட்விச் வார் ரொட்டியைத் தவிர அனைத்து மாசிமோ தயாரிப்புகளின் விலை நாளை முதல் உயர்வு

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 14 :

வெள்ளை சாண்ட்விச் வார் ரொட்டியைத் தவிர அனைத்து மாசிமோ ரொட்டி தயாரிப்புகளின் விலைகள் நாளை சனிக்கிழமை (அக் 15) முதல் 10 சென்னிலிருந்து 60 சென்னாக உயருகின்றன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இத்தயாரிப்புக்களின் விலை உயர்தப்பட்டதாக இத்தாலியன் பேக்கர் Sdn . Bhd கூறியது.

பணவீக்கத்தை சமாளிக்க மக்களுக்கு உதவும் வெள்ளை சாண்ட்விச் வார் ரொட்டியின் விலை மாறாது தொடர்ந்தும் இருக்கும், குறிப்பாக பொருளாதார மந்தநிலையின் போது அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய வகையில் இது உள்ளது என்று இத்தாலியன் பேக்கர் Sdn.Bhd. நிறுவனத்தின் தலைவர் ஜெரேமி கூன் தெரிவித்தார்.

“நுகர்வோர் அதே மலிவு விலையில் அதே சுவையுடனும், அதே தரத்யுடனும் தமது நிறுவனத் தயாரிப்புக்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

நிறுவனம் கடைசியாக ஜனவரி 2022 இல் அதன் விலைகளை அதிகரித்தது, அவ்வேளையில் அது மூலப்பொருட்களின் விலை உயர்வையே காரணம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here