45 ஆண்டுகள் வனவாசம் !
கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்டவர் 45 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த சஜ்ஜத் தங்கல் (70) என்பவர் 1970 களில் வளைகுடா நாடுகளில் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர். 1976ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் இருந்து மும்பை திரும்ப சஜ்ஜத் தங்கல் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் பயணம் ரத்தாகி குறிப்பிட்ட விமானத்தில் சஜ்ஜத் வரவில்லை. அவர் வருவதாக திட்டமிட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 95 பேர் இறந்தனர். சஜ்ஜத்தும் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் கருதினர்.
இந்த விபத்தில் சஜ்ஜத் தங்கலின் நண்பர்கள் , தொழில்கூட்டாளிகள் பலர் இறந்தனர் . பின்னர் , மும்பை திரும்பிய அவர் சிறிது காலம் மனநலம்பாதிக்கப்பட்டு தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம்சிகிச்சை பெற்று வந்தார் .
அவருக்கு பல ஆண்டுகளுப் பின் பழைய நினைவு திரும்பியது . இதைத் தொடர்ந்து சஜ்ஜத் 45 ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தாருடன் சேர்ந்துள்ளார் .
அவருக்கு இனிப்புடன் காத்திருந்த தாய் பாத்திமா பீவி , தனது மகனைக் கண்டதும் கட்டியணைத்து கண்ணீர் விட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.