வெளியில் செல்லும் முன் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்

 வெளியே போவது அவசியமா?

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், ‘இது மிகவும் அவசியம் தானா’ என்று எண்ணிப் பார்த்து, செல்வது நல்லது.உயிரிழந்த உறவுகளின் நினைவுகள் ஒரு புறம்; உயிர் பிழைத்தாலும், சிக்கி சீரழிந்து போன குடும்பங்களின் பரிதாப நிலை இன்னொருபுறம் என, கொரோனா இரண்டாம் அலை, கோவை மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் பாடாய்படுத்தி விட்டது.
பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது’ என்று சற்றே, அனைவரும் நிம்மதி அடையத் தொடங்கிய நேரத்தில், மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.இரண்டாம் அலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டம் கோவை என்பதால், அரசும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது.அதனால், தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும், விதித்த பொதுவான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன், கோவைக்கு கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம் 5, 6, 7 ஆம் வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி ரோடு, சாரமேடு ரோடு ராயல் நகர் சந்திப்பு, ரைஸ் மில் ரோடு, என்.பி.இட்டேரி ரோடு, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய இடங்களில் செயல்படும் கடைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உணவகங்களும் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை, பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி தரப்படும்.மொத்த விற்பனை மார்க்கெட்டுகள் மட்டுமே செயல்படலாம். சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீதம் கடைகள் சுழற்சி முறையில் இயங்க, அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவும், முடிந்தால் அதைக்காட்டிலும் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை பின்பற்றவும், பொதுமக்களும், வணிகர்களும் முன் வர வேண்டும்.வீட்டை விட்டு வெளியில் செல்லும் ஒவ்வொருவரும், ‘இப்போது வெளியில் செல்வது அவசியம் தானா’ என்று ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து, அவசியம் என்று கருதினால் மட்டுமே, வெளியில் செல்ல வேண்டும்.
தடுப்பூசி போடச் செல்வது, தவிர்க்க இயலாத நிலையில் வெளியில் செல்லும்போது, இரட்டை மாஸ்க், சானிட்டைசர் ஆகியவற்றுடன் செல்வதும், வீடு திரும்பியதும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here