மாட்சிமை தங்கிய பேரரசரை அவமதித்து முகநூலில் பதிவிட்ட பெண்ணுக்கு; 9,000 வெள்ளி அபராதம் விதித்தது நீதிமன்றம்

கோலாலம்பூர்: 46 வயதான இல்லத்தரசி ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் மாட்சிமை தங்கிய பேரரசரை (Yang di-Pertuan Agong) அவமதித்த குற்றச்சாட்டில் தனக்கு குறைந்தபட்ச தண்டனையை அவர் கோரினார். அப்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

செஷன்ஸ் நீதிபதி எம்.எம். எட்வின் பரம்ஜோதி முன்பு இன்று ரோஸ்மாவதி முகமட் ஜையின் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் அழுகையின் சத்தம் அந்த நீதிமன்ற அறை முழுவதும் ஒலித்தது என்றும் தனது தவறை உணர்ந்த ரோஸ்மாவதி அதற்காக வருத்தப்பட்டதாகவும், தான் மீண்டும் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததாகவும் கூறினார்.

“நாங்கள் அனைவரும் எதிர்கொள்ளும் சிரமங்களின் காரணமாக நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன், அதை எனது முகநூல் பதிவில் வெளிப்படுத்தினேன்”.

“நீதிமன்றம் எனக்கு எதிராக மிகக் குறைந்த அபராதத்தை விதிக்கும் என்று நம்புகிறேன் … என் குழந்தைகளுக்கு நான் தேவை” என்றும் தான் நான்கு குழந்தைகளின் தாய் என்றும் கூறி அவர் அழுதார்.

எதிர் தரப்பு அரசு வழக்கறிஞர் நூர் டயானா முகமட், எந்த வழக்கறிஞராலும் பிரதிநிதித்துவம் செய்யப்படாத குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தடுப்புகாவல் தண்டனையை வலியுறுத்தினார்.

பின்னர் நீதிமன்றம் ரோஸ்மாவதிக்கு 9,000 வெள்ளி அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனையை விதித்தது.

ரோஸ்மாவதி தனது முகநூல் பக்கமான ‘ரோஸ்மாவதி முகமட் ஜைன்’ என்ற பக்கத்தில் பேரரசரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த ஆண்டு மே 25 அன்று இரவு 7 மணியளவில் மற்றவர்களை தொந்தரவு செய்யும் நோக்கத்துடன் முகநூலில் ஒரு பதிவை பதிவேற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த பதிவு சைபர் கிரைம் மற்றும் மல்டிமீடியா புலனாய்வு பிரிவு, வணிக குற்றப் புலனாய்வு துறை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் ஆகியவற்றின் பார்வைக்கு ஜூன் 1 நண்பகல் 1.06 மணிக்கு வாசிக்கப்பட்டது.

இவ்வழக்கு குற்றம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 பிரிவு 233 (1) (a) ன் கீழ் வரும் அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஒரு வருட சிறை அல்லது இரண்டும் விதிக்க வழிவகுக்கும்.

இவ்வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, ரோஸ்மாவதி தனக்கு விதிக்கப்பட்ட 9,000 வெள்ளி அபராதத்தை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here