கோலாலம்பூர்:
பேங்க் நெகாராவின் முன்னாள் நிர்வாகியை பணி நீக்கம் செய்தது நியாயமற்றது என்று, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
7 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் அரசியலில் ஈடுபட்டார் எனக் கூறி, தீர விசாரிக்காமல் மற்றும் அவர் தரப்பு நியாயங்களை கேக்காமல் கோகிலாவை பணி நீக்கம் செய்தது நியாயமற்றது என நீதிபதி அஹ்மட் பாச்சே கூறினார்.
கோகிலாவின் பணிநீக்கம் பணியாளரின் ஒப்பந்தத்தை மீறியதாக அறிவிக்க வேண்டும் என்ற கோகிலாவின் விண்ணப்பத்தையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
எனவே கோகிலாவின் பணி நீக்கம் நியாயமற்றது என்றும், அவருக்கான இழப்பீடு பின்னர் நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.




















