பிறந்து 18 மாதங்களில் புரட்சி!
மழலைப் பேச்சு கூட பேச வராத 18 மாத காலத்தில் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த அக்ஷிதா என்ற பெண்குழந்தை உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
பிறந்து 18 மாதங்களே ஆன நிலையில் விலங்குகள் பறவைகள் காய்கறி பழவகைகள் ஆங்கில எழுத்துக்கள் ஆகியவற்றை கூறியும் இந்திய தலைவர்கள் தமிழக முதல்வர்கள் ஆகியோரின் புகைப்படத்தை அடையாளம் காண்பிக்கும் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்த பச்சிளங்குழந்தை.
குழந்தை பிறந்து 15 மாதங்களில் தாங்கள் பேச்சுப் பயிற்சி வழங்கியதாகவும் அதீத ஞாபக சக்தியின் காரணமாக குழந்தை உடனடியாக அனைத்தையும் கற்றுக் கொண்டதாகவும் பெருமிதத்துடன் கூறுகின்றனர் பெற்றவர்கள்.
இந்த சாதனையை அங்கீகரித்து கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் extraordinary grasping power genius kid என்ற பட்டத்தையும் சாதனைகளை அங்கீகரித்து அக்குழந்தைக்கு சான்றிதழ் கேடயம் , பதக்கம் அளித்து கௌரவித்துள்ளது.