193 உறுப்பினர்களும் ஒப்புதல்!
நிறவெறிக்கு எதிரான ஐ.நா.வில் தனிப் பிரிவை உருவாக்க ஐ.நா. பொதுக் குழு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நிறவெறிக்கு எதிரான புதிய பிரிவு ஒன்றை அமைப்பதற்கான தீா்மானத்தை 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிரிக்க வம்சாவளியினரின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்கு அந்த அமைப்பு பாடுபடும்.
கடந்க 2015 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை ஆப்பிரிக்க வம்சாவளியினருக்கான ஆண்டுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நிறவெறிக்கு எதிரான தனிப் பிரிவு தொடங்கப்படுகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.