மகாராணியைக் கொல்வதுதான் ஆர்வமாம் !

 இஸ்லாமிய இளைஞருக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியா மகாராணி இரண்டால் எலிசபெத்தை கொலை செய்ய தான் ஆர்வமாக இருப்பதாக கூறிய நபர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உலகின் அரச குடும்பங்கள் இருக்கும் பல நாடுகளில் மக்கள் ஆட்சி மலர்ந்த பின்னரும், அரச குடும்பத்தை இன்று வரை மிகவும் மரியாதையாக நடத்துவது பிரித்தானியா அரசு தான்.

இங்கு நாடாளுமன்றம் இருந்தாலும், மேல் சபை, கீழ் சபை என இருந்தாலும், மகாராணியான இரண்டாம் எலிசபெத் அந்த மசோதாவில் கையெழுத்திட்டால் மட்டுமே சட்டம் ஆகும்.

அந்தளவிற்கு பிரித்தானியா அரசு அரச குடும்பத்தை மதிக்கிறது. இதன் காரணமாக மகாராணி இரண்டாம் எலிசபெத் 90 வயதை கடந்த போதும், அவருக்கான பாதுகாப்பு வளையம் தளர்த்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போது ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த  நபர் ஒருவர்  பிரித்தானியா போலிசாரால் கொல்லப்பட்டுள்ளார்.

Sudesh Amman என்கிற 20 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய வாலிபர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து, அங்கிருந்த இரண்டு பேரை கத்தியால் தாக்கினான்.

இஸ்லாமியரான இவர், 10 நாட்களுக்கு முன்னர் தான் விடுதலையாகியுள்ளார். ஏனெனில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவர் ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

இவரை விடுவிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரித்தது. இருப்பினும், இவர் லண்டன் நீதிமன்ற உத்தரவில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த இவன் பயங்கரவாத குழுவில் இணைய ஆர்வம் காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல தான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காக தான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றும் முன்னதாக இவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது இவர் பிரித்தானியாவின் சிறப்பு புலனாய்வு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பிரித்தானியாவை அச்சுறுத்தி வந்த மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாதியான அம்மான் கொல்லப்பட்டதுதான் நாட்டில் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here