பெட்டாலிங் ஜெயா: பக்காத்தான் ஹரப்பான் இளைஞர் அணித் தலைவர் ஷஸ்னி முனீர் கோவிட்-19 தொற்றுக் காரணமாக இறந்ததாக அவரது கட்சி அமானா இன்று அறிவித்தது.
ஷஸ்னி கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்தார் என்றும் ஒரு வாரத்திற்கு முன்பே அவர் கோவிட்-19 நோய் வகைகளில் 5 ம் இடத்தில் நோயாளியாக பட்டியலிடப்பட்டார்.
அமானா இளைஞர் தலைவரான ஷஸ்னி, கடந்த ஜூலை 19 அன்று கோவிட் -19 சோதனையில் நேர்மறையான பதிலை பெற்றார். ஜூலை 24 அன்று, அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஷஸ்னியின் மரணச் செய்தியால் மனமுடைந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சமூக ஊடகங்களில், ஷஸ்னியின் பிரிவுக்கு இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறவும் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் PKR சிலாங்கூர் இளைஞர் தலைவர் நஜ்வான் ஹலிமி அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களுடன் இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார்.
“என் அன்பான தோழரே, நீங்கள் அமைதியாக ஓய்வெடுங்கள்,” என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், மூவார் எம்.பி சாயிட் சாதிஹ் அப்துல் ரஹ்மான், லெம்பா பந்தாய் எம்.பி பாஃமி பட்சில் ஆகியோரும் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.