வெட்டுக்கருவிகள் மற்றும் பாத்திரங்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று வெள்ளி. இது பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேலும் பெரும்பாலான இந்திய வம்சாவழி குடும்பங்களில் இன்றும் இது பழக்கத்தில் உள்ளது.

வெள்ளித்தட்டில் மக்கள் சாப்பிடுவதற்கு முக்கிய காரணம், வெள்ளி பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிப் பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உணவு விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவி செய்கிறது.
நமது உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது.

அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது.
நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது. உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு.
வெள்ளித் தட்டில் சாப்பிடும் போது அது தீய பாக்டீரியாக்களிடமிருந்து நம்மை பாதுகாப்பதோடு, நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது. மேலும் பலவிதமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான பலவிதமான ஊட்டச் சத்துக்களையும் வழங்குகின்றது.

வெள்ளி உணவில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை அழிக்கக் கூடியது.
பழைய காலத்தில் நம் தமிழ் மூதாதையர்கள் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் வெள்ளி நாணயங்களை இட்டு வைப்பார்கள்.
மேலும் தண்ணீர் மற்றும் ஒயின் போன்றவை நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் அதே நேரம் அவை சுவையாக இருக்கவும் அவற்றை வெள்ளிப் பாத்திரங்களில் மக்கள் ஊற்றி வைத்திருக்கின்றனர்.
வெள்ளி இயற்கையாகவே குளிர்ச்சியாக இருந்தாலும், பருவ காலங்களில் வரும் நோய்களை எதிர்த்து போராடும் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது.

மேலும் வெள்ளி பாத்திரங்கள் தண்ணீரை சுத்திகரிப்பதால், அதில் தண்ணீர் குடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
வெள்ளிச் சாறுகள் பல ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வளரும் ஆண்டுகளில் மூளை சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, குழந்தைகளை வெள்ளிப் பாத்திரங்களில் உண்பது குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும்.
எனவே வெள்ளியின் நன்மைகளை நீங்களும் அறிந்து பலன் பெறுங்கள்.





















