கோலாலம்பூர்:
புக்கிட் ஜாலிலில் உள்ள ஆக்சியாதா அரங்கில் நடைபெற்ற ‘ஹிம்புனான் சாலிடாரிட்டி பெர்சமா காசா: கெலோம்பாங் மலேசியா, பாலஸ்தீன மெர்டேகா’ பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
மாலை 5 மணி முதலே வெள்ளை நிற உடையணிந்த பங்கேற்பாளர்கள் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, ஆதரவு பதாகைகளை ஏந்தி அரங்கை நிரப்பினர். மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, காசாவுக்கான சிறப்பு பிரார்த்தனை அமர்வு நடைபெற்றது.
இந்தநிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரவு தனது முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார். ஃப்ளோட்டிலாவில் பங்கேற்ற மலேசிய தன்னார்வலர்களும், உள்ளூர் பிரபலங்களும் தங்கள் அனுபவங்களை பகிரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.























