சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 18,688 புதிய கோவிட் -19 தொற்றினை பதிவு செய்துள்ளது. மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 1,262,540 ஆக உள்ளது.
சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூர் 6,565 வழக்குகளுடன் அதிக எண்ணிக்கையிலான தினசரி நோய்த்தொற்றுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது என்றார்.
























