முழுமையான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் உணவகங்களில் அமர்ந்து உணவருந்தலாம்

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் உணவருந்த  அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின், இந்த அனுமதி தேசிய மீட்பு திட்டம் (பிஎன்) ஏற்கனவே இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே என்று கூறினார்.

உணவருந்தும் போது முக்கவசம் எடுப்பதும், மேஜையில் சாப்பிடும் போது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது ஆகியவற்றால் தொற்றுநோயை அதிகரிக்கும் இடமாக உணவகங்கள் இருக்கின்றன.

தேவைப்படும் போது மட்டும் உணவருந்துமாறும் மேலும் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்றும் நான் மக்களுக்கு அறிவுறுத்துகிறேன். மேலும்  நல்ல காற்றோட்டம் அமைப்பு கொண்ட உணவக வளாகத்தைத் தேர்வு செய்யவும் என்று இன்று முழுமையான தடுப்பூசி பெற்ற நபர்களுக்கான வசதிகள் குறித்த பிரதமரின் சிறப்பு அறிவிப்பில் அவர் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here