கோத்தா கினபாலு: சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) செப்டம்பர் 30 -க்குப் பிறகு சாலை வரியை செலுத்துவதற்கு எந்த நீட்டிப்பும் வழங்கப்படாது என்றும் , மக்கள் தங்கள் உரிமங்கள் அல்லது சாலை வரியை மைசிகாப் (MySikap) அல்லது மைஇஜி (MyEG) மூலம் புதுப்பிக்கலாம் அல்லது தபால் அலுவலகம் அல்லது JPJ வில் பணம் செலுத்த ஆன்லைன் மூலம் முற்பதிவு செய்து கொண்டு செலுத்த முடியும் என்றும் முன்பு அறிவித்திருந்தது.
கோத்தா கினபாலு எம்.பி சான் ஃபூங் ஹின் இவ்வறிவித்தலை வெகுவாக சாடியதுடன், இது பற்றி கூறியபோது, பல ஆன்லைன் பயனர்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் கிராமப்புறத்தில் வசிக்கும் மக்கள், இதுபோன்ற ஆன்லைன் முன்பதிவுகளை செய்ய மற்றும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளில் தேர்ச்சி பெறவில்லை என்பதை அரசாங்கம் உணரவில்லை என்று கூறினார்.
இந்த நடவடிக்கைகளில் சில மின்னஞ்சல் சரிபார்ப்புகளுடன் பயனர் கணக்குகளை உருவாக்குவதையும் உள்ளடக்கியது, மேலும் மின்னஞ்சல்கள் இல்லாத மக்கள் விரக்தியடைந்தனர் மற்றும் அவர்களிடம் பணம் இருந்தபோதிலும் அவர்களால் பணம் செலுத்த முடியவில்லை என்று கருதுகின்றனர்.
“தகவல் தொழில்நுட்பம் (IT) படிப்பறிவின்மை காரணமாக சபாவில் மிகக் குறைந்தவர்களே மைசெஜத்ரா பதிவு விகிதத்தில் உள்ளனர் என்ற உண்மையை பெரிக்கத்தான் நேஷனல் (BN) அரசாங்கம் மறந்துவிட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை காலாவதியாகும் சாலை வரிகளுடன் கூடியவர்களுக்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டது, மேலும் ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30 வரை தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்க அனுமதிக்கப்பட்டது.
அக்டோபர் 1 முதல் அனைவரும் இந்த அமலாக்கத்திற்கு இணங்குவதை உறுதி செய்ய போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் சாலைத்தடைகளை உருவாக்கி பரிசோதிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
சாலை வரிகளை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் காகித விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், ஜேபிஜே கிளைகள் மற்றும் தபால் நிலையங்களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சான் கூறினார்.
“இவ்வாறான தடங்கல்கள் மக்களுக்கு பல பயணங்களை செய்ய வழிவகுத்தது என்றும் இந்த கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நடமாட்டத்தை மேலும் அதிகரித்தது என்றும் அவர் சாடினார்.
“பெரும்பாலான சாலை பயனாளிகள் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக உள்ளனர், அவர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த விரும்புகிறார்கள் மற்றும் சாலை வரி செலுத்துவதை தாமதப்படுத்தும் எண்ணம் இல்லை,” என்றும் அவர் கூறினார்.
சாலை வரியில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று சான் கூறினார்.
சாலை வரியின் விநியோக கட்டணம் (10 வெள்ளி வரை வசூலிக்கப்படுகிறது), இத்தொகையை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், இது ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் ஒரு வழியாகும் என்றார்.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சாலைத்தடையிட்டு சாலை வரிகளை பரிசோதிக்கும் அமலாக்கத்தைத் தொடர அரசாங்கம் திட்டமிட்டால், முதலில் பொதுமக்கள் தங்கள் சாலை வரியை எளிதாகப் புதுப்பித்து பணம் செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
மேலும் “JPJ யின் அனைத்து கிளைகளிலும் சாலை வரி புதுப்பித்தல், கண்டிப்பான SOP இணக்கத்துடன் நேரடியாக சென்று செலுத்துவதற்கான திட்டத்தை திறக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.
“இதைச் செய்ய முடியாவிட்டால், அரசாங்கம் செப்டம்பர் 30 -க்கு மேல் சாலை வரி புதுப்பித்தலுக்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும்” என்றும் சான் கேட்டுக்கொண்டார்