கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவும் RUMAH PRIHATIN @ GRAND SEASONS திட்டம்

ஓர் ஆண்டுக்கும் மேலாக நம் நாடு கோவிட்-19 வைரஸ் தொற்றுடன் போராடி வருகிறது. நாட்டின் பொது சுகாதார கட்டமைப்புக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய புதிய வகை வைரஸுகள் உருவாகி வருவதை அடுத்து நாம் இந்தப் பெருந்தொற்றுடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. இந்தத் தொற்றை முறியடிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள், உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது.

குறிப்பாக நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி தொடங்கி பல வகையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் இந்த ஆணை அமல்படுத்தப்படுவதால் சில பின்விளைவுகளும் ஏற்படுகின்றன.

பொருளாதாரம் மற்றும் சமூகத் துறைகளுக்கு இது பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனால் நகர்ப்புற ஏழ்மை நிலை வர்க்கத்தினருக்கு மன ரீதியான சுகாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கருதி கூட்டரசுப் பிரதேச அமைச்சு பரிவுமிக்க பிரதேச நடவடிக்கையின் கீழ் மேலும் ஓர் உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

RUMAH PRIHATIN @ GRAND SEASONS  என்றழைக்கப்படும் சமூக நல ஹோட்டல் வகையிலான தங்குமிட மையம் இந்தப் புதிய திட்டமாகும். கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் பாதிப்புற்ற நபர்கள் குறிப்பாக கூட்டரசப் பிரதேசப் பகுதிகளில் வசிக்கும் நகர்ப்புற ஏழ்மை மக்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த RUMAH PRIHATIN @ GRAND SEASONS  மையமானது கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிப்புற்ற நபர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கக்கூடிய தளமாக விளங்கும். அது அரசு சாரா இயக்கங்கள், சங்கங்கள், கார்ப்பரெட் நிர்வாகங்கள், தன்னார்வலர்கள் ஆகிய பிரிவினரின் உதவியோடு வழி நடத்தப்படும்.

ஆரம்பக் கட்டமாக வழங்கப்படும் ‘WE CARE’  சேவையின் 5 முக்கிய அம்சங்கள்:

  1. பரிவுமிக்க சமையல் அறை சேவை – இந்த சமையல் அறையில் தினமும் ஆயிரம் பாக்கெட் இலவச உணவுகள் தயார் செய்யப்படும். வசதி குறைந்தவர்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள முன்களப் பணியாளர்கள், தனித்து விடப்பட்டவர்களுக்கு இந்த உணவுகள் வழங்கப்படும். சமையல்காரர்கள், உதவியாளர்கள் என மொத்தமாக 15 பணியாளர்கள் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணி புரிவர். இந்த சமையல் அறை தினமும் 3 வேளை அயல்படும். காலைச் சிற்றுண்டி காலை 10.30 மணி தொடங்கி காலை 11.30 மணி வரை வழங்கப்படும். தொடர்ந்து மதிய வேளை உணவினை மக்கள் பிற்பகல் 12.30 மணி தொடங்கி பிற்பகல் 1.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.  இரவு உணவு மாலை 5.00 மணி தொடங்கி மாலை 6 மணி வரை வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் உணவு வகைகள் மாற்றம் காணப்படும்.
  2. உணவு வங்கி – உதவிகள் தேவைப்படும் வசதி குறைந்த தரப்பினருக்கு சமையல் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நன்கொடையாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் இந்த உதவிப் பொருட்கள் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.
  3. பரிவுமிக்க தங்கும் அறை (பிபிபி) – இயன்ற வரையிலான குறைந்தபட்ச கட்டண அடிப்படையில் தற்காலிக தங்குமிடம் தேவைப்படும் தனித்து விடப்பட்டவர்கள், மாணவர்கள், நபர்களுக்கு 300 ஹோட்டல் படுக்கை அறைகள் வழங்கப்படுகின்றன. தற்காலிக முறையில் வழங்கப்படும் இந்த அறைகளுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாகக் குறைந்தபட்ங்ம் 30 வெள்ளி வரை வசுலிக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக 75 அறைகள் வாடகைக்கு விடப்படுன்றன.
  4. பரிவுமிக்க மனோவியல் சுகாதாரச் சேவை – தனிப்பட்ட ரகசியம் மற்றும் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படும் மனோவியல் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் கவுன்சிலிங் சேவை. இந்தச் சேவையைப் பெறும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் நபர்களுக்கு இந்தப் பிரத்தியேக சேவை வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் இந்தக் கவுன்சிலிங் சேவையை வழங்குவர். இது தவிர பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவும் கவுன்சிலிங் சேவை வழங்கப்படும்.
  5. டாக்டர் நோர்ஹாயாத்தி ஒமார் தலைமையிலான பதிவு பெற்ற கவுன்சிலர் குழுவினர் அழைப்பு மூலம் இந்தச் சேவைகளை  வழிநடத்துவர். மேலும் தமிழ் மொழி- சீன மாண்டரின் மொழி அறிந்த கவுன்சிலர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  இதனிடையே இந்த கவுன்சிலிங் சேவை பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு  செய்யப்பட்டு ஆன் லைன் மூலமாகவும் வழங்கப்படும். ஒவ்வொரு திங்கட்கிழமையும்    மாலை 4.00 மணிக்கு டாக்டர் ஹஸ்லி ஸக்காரியா மற்றும் இதர கவுன்சிலர்கள் மன  ஆரோக்கியம் தொடர்புடைய பல்வேறு தலைப்புகள் சார்ந்து கலந்துரையாடல்        நடத்துவர்.
  1. பரிவுமிக்க தடுப்பூசி சேவை – சிறப்பு உதவிகள் தேவைப்படும் நபர்கள், தனித்து விடப்பட்டவர்கள், வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய தரப்பினருக்கு இந்தத் தடுப்பூசி சேவை வழங்கப்படும். இந்த மையத்தில் ஒரே நேரத்தில் கூடல் இடைவெளியைக் கடைப்பிடித்து 800க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்க முடியும். தற்போது இந்தத் தடுப்பூசி சேவையானது வாகனத்தின் மூலம் –MyMedic@Wilayah மேற்கொள்ளப்படுகின்றது. இதில் நாள் ஒன்றுக்கு 600 தடுப்பூசிகள் வரை போடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  2. பரிவுமிக்க அடையாளம் காணும் நடவடிக்கை மையம் (பிஜிஜேபி) – பரிவுமிக்க தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதி மன்றங்கள், பள்ளிவாசல் – சுராவ் உறுப்பினர்கள், குடியிருப்பாளர் சங்கத்தினர், அரசு சாரா இயக்கங்கள் ஆகிய தரப்பினர் ஒருங்கிணைக்கப்பட்டு கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் கூட்டரசுப் பிரதேசம் முழுவதும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தோள்கொடுக்க வழிவகுக்கப்படும். குறிப்பாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தேவைப்படும் உதவிகள் – அது குறித்த புகார்கள் தொடர்புடைய தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த நடவடிக்கை மையம், கோலாலம்பூர், புத்ராஜெயா பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 3,853 குடும்பங்கள் உட்பட 15,000 பேரை அடையாளம் காணவுள்ளது.

   இந்த RUMAH PRIHATIN @ GRAND SEASONS  உதவித் திட்டம் ஜூலை 15ஆம் தேதி         தொடங்கி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு முன்புறம் உள்ள GRAND               SEASONS  ஹோட்டலில் கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.

 கூட்டரசுப் பிரதேச அறவாரியம், கோலாலம்பூர் மாநகர் மன்றம்,புத்ராஜெயா அமைப்பு,   மலேசிய இஸ்லாமிய முன்னேற்ற இலாகா, கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய இலாகா,   கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய மன்றம், மக்கள் சமூக நல இலாகா, கூட்டரசுப்             பிரதேச  மக்கள் பிரதிநிதி மன்றம், மலேசிய நட்பு அறவாரியம் (பெர்மாய்), கிளாந்தான்   வறுமை அறவாரியம், முவாபாக்காட் நேஷனல் இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள்   இந்த RUMAH PRIHATIN @ GRAND SEASONS திட்டத்தை ஒருங்கிணைத்து உதவிகள்   வழங்குவதில் உதவும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சு எதிர்பார்க்கின்றது.

மேலும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள மக்களின்  உடல் – மன ரீதியிலான ஆரோக்கியம், பொருளாதாரம், சுகாதாரம், ஆகியவற்றை      மீட்சிபெறச் செய்வதற்கான அரசாங்கத்தின் இலக்கிற்கு ஏற்ப கூட்டரதசுப் பிரதேச வாழ்  மக்களுக்கு உதவிகள் மற்றும் சேவைகள் கிடைக்க இந்த RUMAH PRIHATIN @  GRAND  SEASONS  திட்டமானது உதவும் என அமைச்சு நம்புகின்றது என்று கூட்டரசப்  பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here