பெட்டாலிங் ஜெயா: கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டு மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதில், மொத்தம் 502 ஜோகூர் போலீசார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கோவிட் -19 தொற்று நோய்க்குள்ளாகியுள்ளனர்.
இத் தகவலை ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் ஆயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்ததுடன் மேலும் 282 தொற்றுக்களில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாக கூறினார். அவற்றில் 220 தொற்றுக்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கியது என்றும் கூறினார்.
இரண்டு காவல்துறை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் என மொத்தமாக நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
“அதே காலகட்டத்தில், மொத்தம் 2,518 அதிகாரிகள், போலீஸ் உறுப்பினர்கள் மற்றும் 446 பேர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் ” என்று IPK இல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.




























