பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் கான் அய் லிங்கிற்கு கோவிட் -19 தொற்று உறுதி

கங்கார்: இண்டேரா காயாங்கான் சட்டமன்ற உறுப்பினர் கான் அய் லிங்கிற்கு கோவிட் -19 தொற்று இருப்பது கடந்த திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது.

“நான் கோவிட் -19 க்கு சோதனையில் நேர்மறையான (positive) பதிலை பெற்றுள்ளேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறிவிக்கிறேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

தான் பார்வையிட்ட குடியிருப்பாளர்களில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அறிந்ததாக கான் கூறினார்.

“நான் உடனடியாக அடுத்த நாள் கியால் ஹெல்த் கிளினிக்கில் கோவிட் -19 RT-PCR பரிசோதனை செய்து கொண்டேன், அதன் முடிவு நேர்மறையாக வந்தது,” என்றும் அவர் கூறினார்.

கங்கார் சுகாதார அலுவலகத்தின் அறிவுறுத்தலின்படி, கான் இப்போது வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் “இண்டேரா காயாங்கான் சட்டமன்ற உறுப்பினர் மையம் தற்காலிகமாக மூடப்படும் என்றும் அனைத்து தடங்கல்களுக்கும் நான் வருந்துகிறேன்” என்றும் தெரிவித்தார்.

“கடந்த ஏழு நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அருகில் உள்ள கிளினிக்கில் கோவிட் -19 சோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்,” என்றும் அவர் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here