புத்ராஜெயா: பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று (ஆகஸ்ட் 16) ராஜினாமா செய்வதற்கு முன்னர் இறுதியாக தனது அமைச்சரவையை சந்திக்க உள்ளார்.
முஹிடின் திங்கள்கிழமை காலை 8.07 மணிக்கு இங்குள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வருவதைக் காண முடிந்தது. பெர்டானா புத்ரா மைதானத்திற்குள் அவரது வாகன அணிவகுப்பு நுழைந்தபோது அவர் பத்திரிகையாளர்களை பார்த்து கை அசைத்தார்.
காலை 10 மணிக்கு நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன், அவர் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜுகி அலி உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இஸ்தானா நெகாராவுக்குச் செல்வதற்கு முன், தனது அமைச்சரவை உறுப்பினர்களைச் சந்திப்பார். பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முஹிடின் காலை 11.30 மணிக்கு மாமன்னரை சந்திக்க இருக்கிறார். அங்கு அவர் மாமன்னருக்கு பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதை முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










