பெட்டாலிங் ஜெயா: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு வெளிநாட்டு பெண்கள் உட்பட மொத்தம் 11 பேரை, ஜாமூர் பாஹ்ருவின் தாமான் தாயாவில் உள்ள வளாகத்தில் (ஆகஸ்டு 13) போலீசார் கைது செய்தனர்.
ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் பட்ஸ்லி முகமட் ஜைன் இச்சம்பவம் பற்றி கருத்துரைத்த போது, ஜோகூர் காவல்துறை தலைமையகத்தின் D7 குற்றப் புலனாய்வுத் துறையால் மாலை 5.45 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 23 முதல் 36 வயதுக்குட்பட்ட 11 சந்தேக நபர்களையும் ஓப்ஸ் நோடாவில் கைது செய்தனர் என்று கூறினார்.
தேசிய மறுவாழ்வு திட்டத்தின் (PPN) முதல் கட்டத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) மீறியதைத் தவிர, இந்த குழு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
“சம்பவம் நடந்த வளாகத்தின் பராமரிப்பாளருக்கு 10,000 வெள்ளி அபராதமும் , அதே நேரத்தில் 6 உள்ளூர் வாசிகளுக்கு SOP யை மீறியதற்காக 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு வெளிநாட்டு பெண்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2021 (PPDPPB 2021) இன் விதிமுறை 17 (1) மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 373 ஆகியவற்றின் படி விசாரிக்கப்பட்டது, இது அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழி செய்கிறது.
“மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 372B மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 பிரிவு 55B ஆகியவற்றின் கீழும் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.









