தலிபான்களின் முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் (Facebook) நிறுவனம்

காபூல்:தலிபான் அமைப்பினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் (Facebook) நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாளில் தலிபான்களின் ஆட்சி அங்கு அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.

தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி(Ashraf Gani) தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர். இந்த நிலையில் தலிபான் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க சட்டத்தின்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , விதிமுறைகளின்படி தலிபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here