அனைத்து காலகட்டத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் மனைவிக்கு நன்றி கூறினார் நாட்டின் 9ஆவது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தனது மனைவி முஹைனி ஜைனால் ஆபிதீன் தன்னுடைய  அனைத்து காலங்களில் ஆதரவாக இருந்ததற்கு  நன்றி கூறினார்.

ஒரு முகநூல் பதிவில், இஸ்மாயில் நேற்று இஸ்தானா நெகாராவில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் முஹைனி தனது பாஜு மெலாயுவின் பொத்தானை  போடும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் தனது மனைவியை நானி என்று அழைத்தார்.

எனக்கு 19 வயதாக இருந்தபோது என் மனைவி என் பக்கத்திலேயே இருந்தாள். நான் 1986 இல் 26 வயதில் அரசியலில் நுழைந்தேன். பிறகுதான் ஒரு குடும்பத்தை ஆரம்பித்தேன். நானி, எப்போதும் என் பக்கத்தில் இருந்ததற்கு நன்றி, நான் எதுவும் இல்லாதபோது (இன்று நான்).”

முஹிடின் யாசின் திங்களன்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாட்டின் 9 வது பிரதமராக இஸ்மாயில் நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here