புதிய கொரோனா தொற்றுக்கள் எதுவுமில்லை; சீன சுகாதாரத்துறை அறிவிப்பு

இன்று காலை நிலவரப்படி புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பரவல் ஏற்படவில்லை என்று சீன சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

முதன் முதலாக சீனாவில் உள்ள வுகான் நகரில் இருந்துதான் பரவியது.

ஆனால் சீனா தடுப்பூசிகள் மூலம் வெற்றிகரமாக கொரோனா பரவலை தடுத்து நிறுத்திக் கொண்டது. வெளிநாடுகளில் 2-வது அலை, 3-வது அலை பரவிய நிலையில் சீனாவில் அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் சில மாகாணங்களில் கொரோனா பரவல் ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் நஞ்சீங் என்ற மாகாணத்தில் 20 விமான நிலைய ஊழியர்களிடம் கொரோனா தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 1200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரமாக கொரோனா ஒழிப்பு பணிகளை சீன சுகாதாரத்துறை செய்தது.

சீனாவின் நடவடிக்கைக்கு தற்போது பலன் கிடைத்து உள்ளது. கொரோனா பாதித்த ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தியதன் மூலம் மிக விரைவில் கொரோனா பரவலை சீன சுகாதாரத்துறை கட்டுப்படுத்தியது.

நேற்று வரையிலான நிலவரப்படி சீனாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 652 ஆகும். பலியானவர்களின் எண்ணிக்கை 4,636ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here