SOP யை மீறியதற்காக பொழுதுபோக்கு மையத்தின் முகாமையாளர், மற்றும் 7 வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 60,000 வெள்ளி அபராதம்

பெட்டாலிங் ஜெயா: தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ் SOP களை மீறியதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 22) இங்குள்ள சுங்கை வே வளாகத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனையைத் தொடர்ந்து ஒரு பொழுதுபோக்கு மையத்தின் முகாமையாளர் மற்றும் ஏழு வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 60,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் இச்சம்பவம் பற்றிக் கூறியபோது, பொழுதுபோக்கு மையத்தின் முகாமையாளருக்கு 25,000 வெள்ளி அபராதமும், 7 வாடிக்கையாளர்களுக்கும் தலா 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கூறினார்.

ஞாயிறு மாலை 3 மணிக்கு சோதனை நடத்தப்பட்ட போது, ஏழு வாடிக்கையாளர்களில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் அந்த மையத்தில் இருந்ததாக அவர் கூறினார். மேலும் மூன்று வெளிநாட்டினரும் அங்கு பணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மையத்தின் முகமையார் மது விற்பனை உரிமத்தை சமர்ப்பிக்க தவறினார் என்றும் மேலும் phase 1 திட்டத்தின் கீழ் இம்மையம் செயல்பட்டதாலும் இவ் அபராதம் வழங்கப்பட்டதாக ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் 22 மற்றும் 25 வயதுடைய வாடிக்கையாளர்கள் இருவருக்கு மெத்தம்பேட்டமைன் மற்றும் கெட்டமைன் ஆகியவற்றுக்கு சாதகமான பதிலை பெற்றிருந்தனர் என்று ஃபக்ருதீன் கூறினார்.

மேலும் பொழுதுபோக்கு மையத்தில் வேலையில் இருந்ததாக நம்பப்படும் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறுப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here