கிள்ளான் பள்ளத்தாக்கு NRP 2ஆம் கட்டம் குறித்து முடிவு செய்ய சிறப்பு குழு கூட்டம்: பிரதமர் தகவல்

கிள்ளான் பள்ளத்தாக்கில் 80 விழுக்காட்டினர் கோவிட் -19 தடுப்பூசியை பெற்றுள்ளதால் இப்போது தேசிய மீட்பு திட்டத்தின் (என்ஆர்பி) இரண்டாம் கட்டத்திற்கு செல்ல முடியும்  பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் தலைமையிலான அமைச்சரவையுடன் கோவிட் -19 கூட்டத்தில் உரையாற்றுவதற்கான சிறப்பு குழுவில் இந்த விஷயம் இறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மீண்டும், இந்த குறிப்பிடத்தக்க சாதனையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று அவர் திங்களன்று (ஆகஸ்ட் 30) முகநூலில் பதிவிட்டார். கிள்ளான் பள்ளத்தாக்கில் வயது வந்தோருக்கான தடுப்பூசி விகிதம் 89.5 சதவீதத்தை எட்டியுள்ளதாக இஸ்மாயில் சப்ரி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here