கோலாலம்பூர்: வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 407 ஆவது கிமீ லெம்பா பெரிங்கின்-தஞ்சோங் மலிம் பகுதியில் இன்று ஒருவர் ஓட்டி வந்த கார் சறுக்கி லோரி மற்றும் சாலையோரத் தடுப்பில் மீது மோதியதில் ஆடவர் ஒருவர் தீயில் கருகி இறந்தார்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் நோரசம் கமிஸ், தஞ்சோங் மாலிம் மற்றும் செந்தோசா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்கு முன்பு மாலை 5.14 மணியளவில் தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக கூறினார்.
ஒரு சாங்யாங் கார் முற்றிலும் எரிந்து நிலையில் ஓட்டுநர் மட்டுமே அந்த காரில் இருந்தார் என்று இரவு தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார். இந்த விபத்தின் பல வீடியோக்களும் இன்று சமூக ஊடகங்களில் வைரலாகின.