கோலாலம்பூர்: ஈப்போவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு நீண்ட காலமாக படுக்கையில் இருந்த பின்னர், கடந்த வெள்ளிக்கிழமை இறந்த பாதுகாவலர் வழக்கில் நியாயம் நிலை நிறுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் வலியுறுத்தினார்.
எஸ்.தேவ சகாயம் குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரத்தால் நான் வருத்தமும் அதிர்ச்சியும் அடைகிறேன்” என்று பிரதமர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரனின் டுவீட்டுக்கு பதிலளித்தார். குலசேகரன் தனது டுவீட்டில், இஸ்மாயில் சப்ரிக்கு நேற்று தனது நேரத்தை செலவழித்து தேவ சகாயம் குடும்பத்தை தொடர்பு கொண்டு மரியாதை செலுத்த நன்றி தெரிவித்தார்.
64 வயதான பாதுகாவலர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் காலமானார். கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி மூடப்பட்டிருந்த காண்டோமினியத்தின் நீச்சல் குளத்தை தனது மகன் பயன்படுத்துவதை தடுத்ததால் பாதிக்கப்பட்ட நபர் மீது அதிருப்தி அடைந்த சந்தேகநபர் தாக்கப்பட்டதால் அந்த நபர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கொலைக்காக தண்டனைச் சட்டம் பிரிவு 302 -ன் கீழ் பாதிக்கப்பட்டவர் இறந்த நாளில் காவல்துறையினர் வழக்கை மறு வகைப்படுத்தினர் .குற்றம் நிரூப்பிக்கபட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். இதற்கிடையில், இந்த வழக்கில் குலசேகரனின் அக்கறைக்கு இஸ்மாயில் சப்ரியும் நன்றி தெரிவித்தார்.