தனது 3 வயது மகனைக் கொலை செய்ததாக சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் மீது குற்றச்சாட்டு

பாங்கி: கடந்த வாரம் தனது மூன்று வயது மகனைக் கொன்றதாக 35 வயது பெண் மற்றும் அவரது காதலன் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

லிடா நூர் எஸ்பி பஹாருதீன் மற்றும் அவரது காதலன் நோராசிசோல் பஹார் (34) என்கின்ற இருவரும் இன்று நீதிபதி எஃபாண்டி நாஜிலா அப்துல்லா முன்பு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்டது.

குற்றப்பத்திரிகையின்படி, செப்டம்பர் 2 மாலை 6.30 மணி முதல் 10.41 மணி வரைக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் செக்சன் 2 க்கு அருகிலுள்ள வீட்டில் ஈடாவின் மகனைக் கொலை செய்யும் நோக்கம் இந்த தம்பதியினருக்கு இருந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் குற்றம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது, இது கட்டாய மரண தண்டனைக்கு உட்பட்டது.

துணை அரசு வழக்கறிஞர் ஹக்கீம் அமீர் அப்துல் ஹமீது இவ்வழக்கில் அரசுதரப்பில் ஆஜரானார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் எவரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் அக்டோபர் 14 -ஆம் தேதிக்கு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம் குறித்த தம்பதிகளை கைது செய்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைமை உதவி கமிஷனர் முகமட் ஜைத் ஹாசன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் அடிவயிறு மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அச்சிறுவன் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here