பத்து பகாட்: ஜாலான் அயிர் கித்தாமில் உறைந்த கோழி இறைச்சிப் பொருட்களை பதப்படுத்தும் தொழிற்சாலையின் பணியாளர் “சுழல் குளிர்விப்பு இயந்திரத்தில் (spin chiller)” சிக்கி இறந்தார்.
ஜோகூர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH) இயக்குநர் ஹுஸ்டின் சே அமாட் இச்சம்பவம் பற்றி கூறியபோது, கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாகவும் பாதிக்கப்பட்ட 40 வயதான உள்ளூர் ஆடவர், தனது இரண்டு சகாக்களுடன் இயந்திரத்தை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார்.
மேலும் சம்பவத்தன்று எந்த உற்பத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை மற்றும் பாதிக்கப்பட்டவர் இயந்திரத்தை தனியாக சுத்தம் செய்யும் போது, அவர் ஸ்பின் சில்லர் இயந்திரத்தின் இடைவெளியில் விழுந்ததால் அவரது உடல் திருகு கன்வேயரால் பிழியப்பட்டது என்றார்.
அத்தோடு, பாதிக்கப்பட்டவரின் கால்கள் இயந்திரத்திலிருந்து வெளியே தொங்குவதைப் பார்த்து சக ஊழியரால் அந்த இயந்திரம் அணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதி செய்தார், ”என்று அவர் இன்று (செப்.13) ஓர் அறிக்கையில் கூறினார்.
மேலும் ஸ்பின் சில்லர் இயந்திரங்கள் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்யத் தவறியதற்காகவும், பாதுகாப்பான வேலை முறையை வழங்குவதில் தோல்வியடைந்ததற்காகவும், குறிப்பாக இயந்திரங்களை சுத்தம் செய்யும் பணிக்கான லோகவுட்/டேக்அவுட் அமைப்பை வழங்க தவறியதற்காகவும் அந்த தொழிற்சாலைக்கு எதிராக தடை அறிவிப்பை DOSH வெளியிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பான வேலை நடைமுறைகள் மற்றும் இடர் மதிப்பீடு மற்றும் இயந்திரங்களை சுத்தம் செய்யும் போது ஆபத்துக்கு உள்ளாகும் ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி உட்பட இயந்திரங்களை சுத்தம் செய்வதற்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களை மேம்படுத்தவும் அந்த தொழிற்சாலை முதலாளிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் தமது துறை மூலம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் வேளையிலும், உள்ளக விசாரணை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க முதலாளிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் .
“DOSH ஒவ்வொரு தொழில் விபத்து மற்றும் தொழில் நடவடிக்கைகளால் ஏற்படும் நோயை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 -ன் கீழ் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் பொறுப்பான தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
“அபாயங்களை அடையாளம் காண்பது, தொடர்புடைய அபாயங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பிடுதல் மற்றும் பின்னர் பொருத்தமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்துவது போன்றவை முதலாளிகளின் பொறுப்பாகும் என்றார்.
மேலும் இது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 ன் கீழ் முதலாளிகளின் பொதுவான கடமைகளில் ஒன்றாகும், அங்கு முதலாளிகள் தங்கள் பணியாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் பாதுகாப்பான பணியிடத்தை வழங்க வேண்டும், ”என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.