மங்கோலியாவில் நீர் எலிகளுக்கு டெல்தா வைரஸ் தொற்று உறுதி

மங்கோலியாவில் (Mongolia) ஏழு நீரெலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மங்கோலியாவின் ஜூனோடிக் நோய்களுக்கான தேசிய மையம் (NCJZD) தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் உள்ள நீரெலிகளுக்கு கோவிட் -19 தொற்று உறூதி செய்யப்பட்டது. நாட்டில் விலங்குகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

NCZD இயக்குனர் நியாம்தரஜ் சோஹப்திரக் உள்ளூர் ஊடகங்களிடம், தலைநகர் Ulaanbaatar நிர்வாகத்தில் சுற்றுச்சூழல் துறையில் உள்ள Ulaanbaatar விலங்குகள் இனப்பெருக்க மையத்தின் ஊழியர்கள் ஆகஸ்ட் மாதம் கோவிட் சோதனையை நடத்தினர். அதன் பிறகு, கொரோனா டெல்தா மாறுபாடு தொற்று 7 நீரெலியில் இருப்பது கண்டறியப்பட்டது.

செய்தி நிறுவனமான சின்ஹுவாவும் மங்கோலிய விலங்குகளில் கோவிட் -19 இருப்பதை உறுதி செய்துள்ளது. சீனாவின் ஊடக நிறுவனமான CGTN-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட நீரெலிகளுக்கு இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் பிசிபிசிப்பு தன்மை போன்ற அறிகுறிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த விலங்குகள் இப்போதும் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தலைநகர் உலான்பாதர் உட்பட நாட்டின் 21 மாகாணங்களிலும் டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 34 லட்சம் மக்கள்தொகை கொண்ட மங்கோலியாவில் கொரோனாவினால், 1,021 பேர் இறந்து விட்டனர். மொத்தம் 252,648 பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டதாக பதிவாகிள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here