ஆற்றில் மூழ்கி இறந்த குழந்தையின் உடல் ஆற்றோரத்தில் உள்ள மரக்கிளையிலிருந்து மீட்கப்பட்டது

மாரான்: ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் பதினெட்டு மாத குழந்தையின் உடல் ஆற்றில் உள்ள மரக்கிளையில் கிடந்ததை இன்று காலை 10.30 மணியளவில் அப்பகுதி மக்கள் கண்டுபிடித்தனர்.

இது அக்குழந்தை விழுந்த இடத்திலிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது எனவும் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளும் வீட்டில் இருக்கும் போது சேட்டைகள் செய்தும் முரட்டுதனமாகவும் இருந்ததால், ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவரது மனைவிக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கத்திலேயே தான் தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, ஆற்றின் அருகேயுள்ள செம்பனைத்தோட்டத்திற்கு சென்றதாகவும் கூறினார்.

செம்பனைத்தோட்டத்தில் உள்ள அவரது பண்ணையில் ஓய்வெடுக்கும் நோக்கில் ஒரு குடிசை அமைத்ததாகவும் , காரை நிறுத்திவிட்டு அவர் வந்தபோது அவரது இரு பிள்ளைகள் பண்ணைக்கு வந்ததாகவும் , 15 நிமிடங்களாகியும் இளைய குழந்தையை காணவில்லை என்றே அவரை தேடிச்சென்றதாகவும் அவர் கூறினார்.

கோலாலம்பூரில் வாடகைக்கார் ஓட்டுநராக பணிபுரியும் அவர், இந்த கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனையின் பின்னர், பெல்டா ஜெங்கா 4 இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் அணுகப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நண்பகல் மாரான் அருகேயுள்ள சுங்கை பெல்டா ஜெங்கா 4 ஆற்றின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தந்தையின் காரில் இருந்து, பதினேட்டு மாதங்களேயான ஓர் ஆண் குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்பட்டு, தீயணைப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here