மீன்பிடிப்பு பயணம் துயரத்தில் முடிந்தது : குவாலா மெர்சாங் கடலில் தம்பதி உயிரிழப்பு

மாராங் அருகே கோலா மெர்சாங் கடலுக்கு சென்ற தம்பதியர் படகு கவிழ்ந்ததில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் மீன்பிடிப்பு பயணம் துயரத்தில் முடிந்தது.

புலாவ் கெரெங்காவைச் சேர்ந்த 47 வயதுடைய Abdul Rahim Mustaffa, அவரது மனைவி 46 வயது Norhasriah Che Osman ஆகியோர் நேற்று காலை 7.45 மணியளவில் 20 அடி நீளமுள்ள ஃபைபர்கிளாஸ் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.

பலத்த காற்று, அலைகளால் படகு கவிழ்ந்தது. பிற்பகல் 4.30 மணிக்கு நோர்ஹஸ்ரியாஹ் உடல் மீட்கப்பட்டது. 15 நிமிடங்களுக்கு பின்னர் அப்துல் ரஹிம் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதுஎன மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Sofian Redzuan தெரிவித்தார்.

இருவரின் உடலும் சுல்தானா நூர் சஹீரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இன்னிலையில் கடலுக்கு செல்லும் முன் வானிலை தகவலை சரிபார்த்துக்கொள்ளும்படி அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here