கிளந்தானின் எல்லையருகே 35,000 வெள்ளி மதிப்புள்ள ஏழு மான்களை கடத்தியதாக நம்பப்படும் இரு ஆடவர்கள் கைது

பாசீர் மாஸ் : பொது நடவடிக்கைப் படை (GOF) நேற்று இரவு நடத்திய சோதனையின் போது சுமார் 35,000 வெள்ளி மதிப்புள்ள ஏழு மான்களைக் கைப்பற்றியது.

கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் அந்த  மான்களை வாகனங்களில் வைத்திருந்தார்கள்.

GOF ஏழாவது பட்டாலியனின் கட்டளை அதிகாரி அசாரி நுசி இச்சம்பவம் பற்றிக்கூறுகையில், கம்போங் சிராமில் நடந்த நடவடிக்கையில் சுமார் 50,000 வெள்ளி மதிப்புள்ள ஒரு வேனும் நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.

“GOF உறுப்பினர்கள் நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் சாதாரண கண்காணிப்பை நடத்தினர், அப்போது குறித்த இரண்டு வாகனங்களையும் பார்த்தனர் என்றும் பின்னர் அவர்கள் இரு ஓட்டுநர்களையும் வாகனங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்கள். ஆய்வுக்குப் பிறகு, GOF உறுப்பினர்கள் ஏழு மான்களுடன் பல மரக் கூண்டுகளைக் கண்டுபிடித்தனர்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் வாகன ஓட்டுநர்களான இரு உள்ளூர் ஆடவர்களையும் தடுத்து நிறுத்தியதுடன் அவர்கள் வைத்திருந்த விலங்குகள் மற்றும் வாகனங்களையும் கைப்பற்றினர்,” என்று அவர் மேலும் கூறினார்.

கோலோக் ஆறு வழியாக மான்கள் மாநிலத்திற்குள் கடத்தப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அசாரி கூறினார்.

உள்ளூர் விநியோகிப்பாளர்களுக்கு அந்த விலங்குகள் விநியோகிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

“34 மற்றும் 41 வயதுடைய ஆண்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் விலங்குகள் கால்நடை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here