பாலியல் குற்ற நீதிமன்றங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும்; வலியுறுத்தும் அரசு

பெட்டாலிங் ஜெயா: நாட்டில் உள்ள குழந்தைகளின் உரிமைகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் ஒவ்வொரு மாநிலத்திலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.

குழந்தைகள் உரிமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வதில் கவனம் செலுத்தும், விரிவான மற்றும் திறமையான அணுகுமுறை கொண்ட “குழந்தைகள் ஆணையத்தை” அமைக்கவும் அது பரிந்துரைத்தது.

செப்டம்பர் 15 அன்று பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாட்டு விவகாரங்களுக்கான பாராளுமன்றத்தின் சிறப்புத் தேர்வுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு பெங்கராங் எம்.பி. அசாலினா ஓத்மான் சையத் தலைமை தாங்கினார் மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை மந்திரி சித்தி ஜெய்லா முகமட் யூசோஃப், அதன் முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா யோவ் மற்றும் இது தொடர்புடைய அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்குவார்கள்.

இன்று அக்குழு வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளின் சுய அடையாளத்திற்கான உரிமையை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, குறிப்பாக அவர்களின் எதிர்காலத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அது கூறியுள்ளது.

பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாளும் குற்றவியல் புலனாய்வுத் துறையின் D11 பிரிவை வலுப்படுத்தவும் இந்தக் குழு அரசை வலியுறுத்தியது.

இது போன்ற வழக்குகளை கையாளுவதற்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உறுதி செய்வதற்காகவும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றவியல் நீதிமன்றம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்று அது மேலும் கூறியுள்ளது.

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் நோக்கில் குழந்தைகள் ஆணையத்தை அமைப்பதற்கும் குழந்தைகள் ஆணையச் சட்டத்தை உருவாக்கவும் அந்தக்குழு பரிந்துரைத்தது.

“இது ஒரு சுயாதீன அமைப்பாகவும், அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு உட்பட்டதாக இருக்காது என்றும் மலேசியாவில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்க சிறப்பு அதிகார வரம்பைக் கொண்டு செயல்பட வேண்டும்” என்று எந்தக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here